RAMADAN # 1

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 1⃣

أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم

🌙 What is RAMADAN❓❔❓

Ramadan is taken from the word ‘ramad’ which means that which is intensely or vehemently heated by the sun. Imam Al-Qurtubi narrates: “It was named Ramadan because it burns the sins of people with righteous deeds.”

-Tafseer al-Qurtubi

Oh Allah! burn away our sins during this blessed month and save us from the agony of the Fire.

✨ Ramadan is one of the twelve Arabic months🗓.

✨ It is a month which is venerated in the Islamic religion, and it is distinguished from the other months by a number of characteristics and virtues……

✨ Allaah has made fasting this month the fourth pillar of Islam, as He says (interpretation of the meaning):

🌙 “The month of Ramadan in which was revealed the Qur’aan📘, a guidance for mankind and clear proofs for the guidance and the criterion (between right and wrong). So whoever of you sights (the crescent 🌙on the first night of) the month (of Ramadan ), he must observe Sawm (fasts) that month…”

📖 [al-Baqarah 2:185]

It was narrated in al-Saheehayn (al-Bukhaari, 8; Muslim, 16) from the hadeeth of Ibn ‘Umar that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

🌙 “Islam is built on five🖐🏻 (pillars): the testimony that there is no god except Allaah☝🏻 and that Muhammad is the Messenger of Allaah🇸🇦; establishing prayer🛐; paying zakaah💰; fasting Ramadaan🤐; and Hajj to the House🕋 (the Ka’bah).”

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣1⃣

أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم

🌙ரமழான் என்றால் என்ன ❓❔❓

✨ரமலான் என்பது 12 அரபி மாதங்களில் ஒரு மாதமாகும்🗓.

✨ இஸ்லாமிய மார்க்கத்தில் இம்மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.மேலும், இம்மாதத்தின் சிறப்பு மற்றும் பல தனி தன்மையின் காரணமாக இது மற்ற மாதங்களிலிருந்து வேறுப்பட்டு இருக்கின்றது . அவற்றுள் சில ….

✨ அல்லாஹ் இம்மாதத்தில் இஸ்லாத்தின் நான்காவது தூணான நோன்பை நோர்க்குமாறு கூறுகிறான் . இதை பற்றி அல்லாஹ் கூறுவதாவது :

🌙 ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் 📘 (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை🌙 அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்…….

📖 ஸூரத்துல் பகரா
2:185.

மேலும் ஷஹீஹ் புகாரி (8) மற்றும் ஷஹீஹ் முஸ்லிமில் (20,21) கூறியதாவது:

🌙“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி☝🏻 வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர்🇸🇦 என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல்🛐,ஸகாத்து வழங்குதல்💰, ரமழானில் நோன்பு நோற்றல்🤐 ஹஜ் செய்தல்🕋 ஆகிய ஐந்து🖐🏻 காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

RAMADAN # 2

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 2⃣

📖 Allaah revealed the Qur’aan in this month, as He says in the verse quoted above (interpretation of the meaning):

🌙“The month of Ramadan in which was revealed the Qur’aan, a guidance for mankind and clear proofs for the guidance and the criterion (between right and wrong)…”

🔖[al-Baqarah 2:185]

And Allaah says (interpretation of the meaning):

🌠“Verily, We have sent it (this Qur’aan) down in the Night of Al-Qadr (Decree).”

🔖[al-Qadr 97:1]

🌠“We sent it (this Qur’aan) down on a blessed night [i.e. the Night of Al-Qadr… in the month of Ramadan — the 9th month of the Islamic calendar] Verily, We are ever warning [mankind that Our Torment will reach those who disbelieve in Our Oneness of Lordship and in Our Oneness of worship]”

📖[al-Dukhaan 44:3]

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣2⃣

📖அல்லாஹ் இம்மாதத்தில் தான் குர்ஆனை இறக்கினான் . இதை பற்றி அல்லாஹ் கூறுவதாவது :

🌙 ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது……..

🔖ஸூரத்துல் பகரா
2:185.

மேலும், அல்லாஹ் கூறுவதாவது :

🌠 நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.

🔖 ஸூரத்துல் கத்ரி 97 : 1

🌠 நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள (“லைலத்துல் கத்ரு” என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம்.

📖 ஸூரத்துத் துகான் 44 : 3

RAMADAN # 3

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 3⃣

🌠 Allaah has made Laylat al-Qadr in this month, which is better than a thousand months, as Allaah says (interpretation of the meaning):

🌌“Verily, We have sent it (this Qur’aan) down in the Night of Al-Qadr (Decree).

🌌And what will make you know what the Night of Al-Qadr (Decree) is?

🌌The Night of Al-Qadr (Decree) is better than a thousand months (i.e. worshipping Allaah in that night is better than worshipping Him a thousand months, i.e. 83 years and 4 months).

🌌Therein descend the angels and the Rooh [Jibreel (Gabriel)] by Allaah’s Permission with all Decrees,

🌌(All that night), there is peace (and goodness from Allaah to His believing slaves) until the appearance of dawn”

📖 [Al-Qadar 97:1-5]

🌠“We sent it (this Qur’aan) down on a blessed night [i.e. the Night of Al-Qadr… in the month of Ramadan — the 9th month of the Islamic calendar] Verily, We are ever warning [mankind that Our Torment will reach those who disbelieve in Our Oneness of Lordship and in Our Oneness of worship]”

📖[al-Dukhaan 44:3]

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣3⃣

🌠 அல்லாஹ் இம்மாதத்தில் தான் ” லைலத்துல் கத்ரை ” அமைத்துள்ளான் .இது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும் . இதை பற்றி அல்லாஹ் கூறுவதாவது :

🌌 நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.

🌌 (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?

🌌 கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.

🌌
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.

🌌 ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).

📖 ஸூரத்துல் கத்ர் 97 : 1 – 5

🌠 நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள (“லைலத்துல் கத்ர்” என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கி வைத்து, நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம்.

📖 ஸூரத்துத் துகான் 44 : 3

RAMADAN # 4

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 4⃣

🌠 Allaah has blessed Ramadaan with Laylat al-Qadr. Explaining the great status of this blessed night, Soorat al-Qadr was revealed, and there are many ahaadeeth which also speak of that, such as the hadeeth of Abu Hurayrah (may Allaah be pleased with him) who said:

✨The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “There has come to you Ramadaan, a blessed month which Allaah has enjoined you to fast, during which the gates of heaven are opened 🔓and the gates of Hell are closed🔐 and the rebellious devils are chained up⛓. In it there is a night which is better than a thousand months, and whoever is deprived of its goodness is indeed deprived.”

📚Narrated by al-Nasaa’i, 2106; Ahmad, 8769. classed as saheeh by al-Albaani in Saheeh al-Targheeb, 999.

✨And Abu Hurayrah (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said:
“Whoever spends Laylat al-Qadr in prayer out of faith and in the hope of reward, will be forgiven his previous sins.”

📚Narrated by al-Bukhaari, 1910; Muslim, 760.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣4⃣

🌠அல்லாஹ் ரமழான் மாதத்தை லைலத்துல் கத்ர் இரவை கொண்டு சிறப்பித்துள்ளான்.மேலும், புனிதமிக்க இவ்விரவின் சிறந்த நிலையை பற்றி விளக்கி கூறுவதற்காக அல்லாஹ் ‘ஸூரத்துல் கத்ர்’ என்னும் அத்தியாயத்தை இறக்கி வைத்தான் . இவ்விரவை பற்றி பல ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது . அவ்வாறு கூறப்பட்ட சில ஹதீஸ்கள் பின்வருமாறு :

✨ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புனிதமிக்க ரமழான் மாதம் உம்மிடையே வந்துள்ளது, இம்மாதத்தில் உம்மை நோன்பு நோர்க்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் ரமழான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும்🔓 நரகத்தின் கதவுகள் மூடப்படும்🔐 ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் ⛓. இம்மாதத்தில் ஓர் இரவு உள்ளது, கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
யார் அதன் நன்மையை இழக்கிறாரோ அவர் நிச்சயமாக இழந்தவராவார் .”
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📚 அல் நஸாயீ (2106) அஹ்மது (8769) ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல் அல்பானியால் ஸஹீஹ் என்று ஸஹீஹ் அல் தர்கீபில் (999) கூறப்பட்டுள்ளது.

✨ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

📚 ஸஹீஹ் புகாரி(1901) ஸஹீஹ் முஸ்லிம் (1393) ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

RAMADAN # 5

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣  5⃣

✨ In this month, Allaah opens 🔓the gates of Paradise and closes🔒 the gates of Hell, and chains ⛓up the devils, as is stated in al-Saheehayn

🔑 (al-Bukhaari, 1898; Muslim, 1079)

🗝From the hadeeth of Abu Hurayrah رضي الله عنه who said that the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said:

“When Ramadaan comes, the gates of Paradise are opened 🔓and the gates of Hell are closed🔓, and the devils are chained⛓ up.”

🎓According to al-Nasaa’i:

⛓“The most evil jinn are chained up.”⛓

⚔ This does not mean that the devils have no influence at all, rather it indicates that they become weaker in Ramadaan and are not able to do what they are able to do at times other than Ramadaan.

⚔It may be interpreted as meaning that the ones who are chained up are the most evil devils, not all of them.

🎓Al – qurtubi said:
Even if all of the devils were to be chained up, that does not mean that no evil action would happen, because there are other causes of evil action besides the devils, such as evil souls, bad habits and the human devils.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣5⃣

✨ இம்மாதத்தில் அல்லாஹ் வானத்தின் வாசல்களை திறக்கிறான் 🔓நரகத்தின் வாயில்களை அடைக்கிறான் 🔒மேலும் ஷைத்தான்களை விலங்கிடு்கிறான்⛓

🔑இதை பற்றி ஸஹீஹ் புகாரி (1899) மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் (1956) கூறியுள்ளதாவது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

⚔ ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன🔓 நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன🔒 ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.”⛓ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

🎓அல் நஸாயீயின் கூற்றுப்படி

⛓”மிகவும் கெட்ட தீய ஜின்கள் விலங்கிடப்படுக்கின்றனர் .”⛓

⚔இதன் அர்த்தம் அந்த ஷைத்தான்களால் எந்த பாதிப்பையும் உண்டாக்க முடியாது என்பதல்ல ; மாறாக அவை ரமழான் மாதத்தில் பலவீனமாகி விடுக்கின்றன . மேலும், அந்த ஷைத்தான்களால் மற்ற மாதங்களில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த செயல்களை ரமழான் மாதத்தில் செய்ய முடிவதில்லை என்பதேயாகும்.

⚔இதன் அர்த்தம் மிகவும் கெட்ட ஷைத்தான்கள் விலங்கிடப்படுக்கின்றனர் . ஆனால், அனைத்து ஷைத்தான்களும் விலங்கிடப்படுவதில்லை என்பதேயாகும்.

🎓அல் குர்துபி கூறியதாவது:

இன்னும் அனைத்து ஷைத்தான்களும் விலங்கிடப்பட்டால் எந்த தீய நடவடிக்கைகளும் நடைபெறாது என்பது அதன் அர்த்தம் அல்ல; ஏனெனில் தீய செயல்கள் நடைபெறுவதற்கு ஷைத்தான்களை தவிர வேறு சில காரணங்களும் உள்ளன . அவை தீய உள்ளங்கள், கெட்ட பழக்கங்கள் மற்றும் மனித ஷைத்தான்கள் போன்றவைகளாகும்.

RAMADAN # 6

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣6⃣

🎆Allaah has made fasting in Ramadaan and spending its nights in prayer out of faith and in the hope of reward a means of forgiveness of *sins*, as was proven in al-Saheehayn
🚦(al-Bukhaari, 2014; Muslim, 760)

From the hadeeth of Abu Hurayrah رضي الله عنه according to which the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

*“Whoever fasts Ramadaan out of faith and in the hope of reward, his previous sins will be forgiven.”*

🚦 And al-Bukhaari (2008) and Muslim (174) also narrated from Abu Hurayrah that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

*“Whoever spends the nights of Ramadaan in prayer out of faith and in the hope of reward, his previous sins will be forgiven.”*

🎆The Muslims are unanimously agreed that it is Sunnah to pray qiyaam at night in Ramadaan.With regard to Taraweeh, the scholars use this word to refer to qiyaam al-layl in Ramadan at the beginning of the night. It may also be called tahajjud or qiyaam al-layl.

⛽ *Sins* here means minor sins which relate to the Rights of Allah.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣6⃣ ➡A

*The Ramadan of Our Pious Predecessors*

 

🌴Narrated by Abdullah: The Prophet said,

“The best people are those living in my generation, and then those who will follow them, and then those who will follow the latter. Then there will come some people who will bear witness before taking oaths, and take oaths before bearing witness.” (Ibrahim, a sub-narrator said, “They used to beat us for witnesses and covenants when we were still children.”

🌴The three great generations were the generation of the our Prophet and his companions, the generation of the ta’biin (the righteous predecessors) and the generation of at’bau ta’biin (the followers of the righteous predecessors). How was their Ramadhan? Was their Ramadan like our Ramadan? How was their feeling when Ramadhan started?

🌴Ma’ali bin Fudail said, ‘They used to ask Allah the Almighty six months before Ramadhan to grant them long life so that they could reach Ramadhan and they used to ask Allah the Almighty six months after Ramadhan to accept their fasting’.

Amazing indeed❗❗❗Their whole year was full of supplication and worship.سبحان الله

🌴It’s also narrated that Ibn Umar used to say when Ramadhan started, ‘Welcome oh the month that purifies us from the sins’.

❗This was their situation before Ramadhan started. How do think their situation was in the midst of Ramadhan❓❓❓❗BismiAllah – let us start the journey through their history…

ان شاء الله
[07/05 02:06] Kamila Grammar: 🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣6⃣ ➡ B

*Their Relationship with Qur’an*

🍒The companions of our Prophet صلى الله عليه وسلم used to give special preference to the Quran during the holy month of Ramadhan.

🍓It is said that Uthman bin Affan رضي الله عنه used to finish the recitation of the whole Quran once everyday.

🍎Their recitation was not only reading the verses but contemplating in its meaning. ‘Narrated By Albayhaqi, Abu Hureyra رضي الله عنه said, when the last verses of Suratul Najm (53) were revealed –

“Do you then wonder at this recital (the Quran)? And you laugh at it and weep not” (53: 59,60,61)

🍉The companions who used to live in the mosque of Prophet cried so hard. When Rasulullah صلى الله عليه وسلم heard them he came to them and started weeping with them. And then he said ‘He will not enter hellfire a person who cried out of fear of Allah the Almighty’ (Bayhaqi).

🍇It is also said that Ibn Umar رضي الله عنه used to cry very much when he read the Quran. One day while he was reading Suratul Mutaffin, it is said that when he reached the verse – “The Day when (all) mankind will stand before the Lord of the ‘Alamin (mankind, jinns and all that exists)?” (83:6) – he cried so hard that he was overwhelmed and could not read the Quran anymore.

🍎This is how the relationship of our Prophet صلى الله عليه وسلم and his companions was with Quran and we will see how at’bau ta’biin’s (the followers of the righteous predecessors) relationship with Quran during Ramadan was in the next post

ان شاء الله

🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 6⃣ ➡ *C*

*At’bau ta’biin’s (the followers of the righteous predecessors) relationship with Quran*

📕‘When Ramadhan started Sufyan Athawri used to leave all acts of worship and turn to Quran’

📗‘Sa’aid Ibnu Jubeyr used to finish the whole recitation of Quran in two nights’

📘‘Malik ibn Anas used to run from all circles of knowledge when Ramadhan started and turned instead to the recitation of Quran’

📙‘Zahriy used to say when Ramadan started, ‘Indeed it’s the recitation of Quran and feeding the poor’.

 

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
[09/05 09:24] Kamila Grammar: 🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 6⃣ ➡ *D*

*A Typical Day of Our Righteous Predecessors*

🌤They used to start their day with prayer and supplication until sunrise. Their whole day was full of recitation of Quran. If we were to calculate how many hours they read the Quran in Ramadhan, the biggest portion of the hours would go to Quran.

🌥‘Aswad Ibn Yaziid used to finish the recitation of Quran in two nights’

⛅‘Khataada used to finish the recitation of Quran every seven days and every three days in ramadhan.’

🕰The average reader of Quran recites a Juz in 30-35 minutes. The Quran has 30 Juz. So that means that they used to read 10 Juz a day. (30 minutes multiplied by 10 Juz = 300minutes/60= 5hours). So we can say they used to read the Quran 5 hours a day.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 6⃣ ➡ *E*

*A Typical Day of Our Righteous Predecessors*

🍽A typical day of Uthman Ibn Affan in Ramadhan was fasting during the day time and prayer and prostration at night ‘(Sunan al-bayhaqi 4/301).

🗡And Uthman bin Affan was also killed while he was fasting. (Al-hilyah 1/55)

🤐Their day was full of supplications and free from vain talks.

🙉🙈🙊Jabir Bin Abdullah said, ‘When you fast then let your ears, eyes and your tongue fast from false statement and bad deeds. And be calm and don’t let the day your fasting and the day you are not fasting be the same’ (Ibnu abi sheyba 2/422)

🍱🍹When the time of iftaar arrived, they used to race in feeding the poor and the unfortunate. It’s narrated that Ibnu Umar used to break his fast with the poor people and if a poor person came to him asking for food while he was eating he used to give him his portion.’.

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 6⃣ ➡ *F*

*A Typical Day of Our Righteous Predecessors*

🌷The righteous predecessors would also remain away from sinful people and their gatherings

🌷Indeed, as we find in the example of ‘Abdullaah ibn Mas’ud, even if they were invited to a wedding feast, they would leave that feast if they found something forbidden therein. They would stay away from the people of sin and innovations. In this way, their hearts would remain pure and clean. They would not be infected or infiltrated by the doubts and desires of such evil people. By mixing only with good people and attending only settings in which the forbidden aspects are absent, they were able to increase their faith and keep their faith strong.

🌷One of the pious predecessors who wept when he was dying and so he was asked, “What makes you weep?” He said, “That those who fast do so without me, that those who remember Allah do so without me, and that those who pray do so without me.”

🥀(Read on pg 55, Abdul-Malik bin Muhammad ibn Abdul Rahman Al-Qasim, Silent Moments: The Description of Before & After Death Aspects. Darussalam Publishers. Riyadh:2004.)

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 6⃣

🎆அல்லாஹ், ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்று மற்றும் இரவில் வணக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதை பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான வழிவகையாக ஏற்படுத்தியுள்ளான்

🚦இதனை ஸஹீஹ் புகாரி (2014) மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் (760) உள்ள ஹதீஸ்கள் சான்று பிறப்பிக்கின்றன

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: *” ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!* என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

🚦மேலும் ஸஹீஹ் புகாரி(2008) மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில்(1392) கூறியிருப்பதாவது

*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!”* என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

🎆முஸ்லிம்கள் ஒருமனதாக ரமழான் மாதத்தில் இரவில் நின்று வழிப்படுவதை ‘சுன்னா’ என்று ஏற்றுக்கொண்டுள்ளனர் . தராவீஹ்யை பொருத்த வரை அறிஞர்கள் , ரமழான் மாதத்தில் முற்பகுதி இரவுகளில் நின்று வணங்குவதை குறிக்கவே இவ்வார்த்தையை உபயோக்கிக்கின்றனர் . இதனை ‘தஹஜ்ஜத்’ என்றும் ‘இரவில் நின்று வணங்குதல் ‘ எனவும் கூறுவர்.

⛽ இங்கு *பாவங்கள்* என்பது சிறிய பாவங்களை குறிக்கின்றது. அது அல்லாஹ்வின் உரிமைக்குட்பட்டதாகும் .

#⃣ 6⃣ ➡ A

*நம்முடைய ஸாலிஹான முன்னோடிகளின் ரமளான்*

🌴அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் கூறியதாவது:

நபி صلى الله عليه و سلم அவர்கள், “மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறிவிட்டு, மூன்றாவது தடவையில் அல்லது நான்காவது தடவையில் “அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்களது சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களது சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்” என்று கூறினார்கள். (இப்ராஹிம், ஓர் துணை அறிவிப்பாளர் அறிவித்ததாவது, ” சாட்சிகள் மற்றும் உடன்படிக்கைக்காக நாங்கள் குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் எங்களை அடிப்பார்கள்.”

🌴மூன்று பெரிய தலைமுறையினர் யாரெனில், நமது நபி صلى الله عليه وسلم மற்றும் அவருடைய தோழர்கள், தாபியீன் தலைமுறையினர் (ஸாலிஹான முன்னோடிகள்) மற்றும் அத்தபுவ தாபியீன் (ஸாலிஹான முன்னோடிகளை பின்பற்றுபவர்கள்). அவர்களுடைய ரமளான் எப்படி இருந்தது ? அவர்களுடைய ரமளான் நம்முடைய ரமளான் போன்று இருந்ததா ? ரமளான் ஆரம்பம் ஆகும் போது அவர்களுடைய உணர்வு எவ்வாறு இருந்தது ?

🌴மஅலி இப்னு ஃபுதைல் رحمه الله கூறினார்கள், ‘அவர்கள் ரமளான் மாதத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ரமளானுக்கு 6 மாதங்கள் முன்பு அவர்கள் வாழ்வை அதிகரிக்குமாறு துஆ கேட்பார்கள் பின்னர் ரமளானுக்கு பிறகு 6 மாதங்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர்களுடைய நோன்பை ஏற்றுக்கொள்ளுமாறு துஆ கேட்பார்கள்.’

ஆச்சரியமாக உள்ளதல்லவா❗❗❗ அவர்களுடைய முழு வருடமும் துஆ மற்றும் வழிபாடுகளால் நிறைந்திருந்தது.

🌴மேலும் அறிவிக்கப்பட்டிருப்பதாவது, இப்னு உமர் رضي الله عنه அவர்கள் ரமளான் மாதம் ஆரம்பம் ஆகும் போது, ‘எங்களை பாவங்களிலிருந்து தூய்மையாக்கும் மாதமே வருக’ என கூறுபவர்களாக இருந்தார்கள்.

❗இவை எல்லாம் ரமளான் ஆரம்பமாவதற்கு முன்பான சூழ்நிலை. ரமளான் மாதத்தின் நடுவில் அவர்களுடைய சூழ்நிலை எவ்வாறு இருந்தது❓❓❓❗ பிஸ்மில்லாஹ்-நம்முடைய பயணத்தை அவர்களுடைய வரலாறு மூலம் தொடங்குவோம்…

ان شاء الله

 

#⃣6⃣ ➡ B

*குர்ஆனுடன் அவர்களுடைய தொடர்பு*

🍒நபி صلى الله عليه وسلم அவர்களுடைய தோழர்கள், புனிதமான ரமளான் மாதத்தில் குர்ஆனுக்கு சிறப்பான முன்னுரிமை கொடுப்பார்கள்.

🍓உத்மான் பின் அஃப்ஃபான் رضي الله عنه அவர்கள் ஒரு நாளில் குர்ஆன் முழுவதையும் ஒரு முறை ஓதி முடித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

🍎அவர்களுடைய ஓதுதல் என்பது வெறும் இறை வசனங்களை ஓதுவது மட்டுமல்லாமல், அதன் பொருளை குறித்து சிந்திப்பதாகவும் இருந்தது. அபூஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்ததாக, அல்பைஹகி அறிவிப்பதாவது, ஸூரத்துந்நஜ்மின் (53) இறுதி இறை வசனங்கள் அருளப்பெற்ற போது,

(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
(53:59,60,61)

🍉 நபி صلى الله عليه وسلم அவர்களுடைய பள்ளிவாசலில் இருந்த தோழர்கள் மிக அதிகமாக அழுதார்கள். ரஸூலுல்லாஹ் صلى الله عليه وسلم இதனை செவியுற்ற போது அவர் அவர்களிடம் வந்து அவர்களோடு அழ தொடங்கினார். பின்பு கூறினார், ‘ எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பயத்தால் அழுதவர் நரகம் புக மாட்டார்’ (பைஹகி).

🍇இப்னு உமர் رضي الله عنه அவர்கள் குர்ஆன் ஓதும் போது மிக அதிகமாக அழக்கூடியவராக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. ஒருநாள் அவர் ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் ஓதிக்கொண்டிருக்கும் போது, கீழ்காணும் இறை வசனத்தை அடைந்த போது-
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள் (83:6) – அவர் மிகவும் அதிகமாக அழுததால் அதற்கு மேல் அவரால் குர்ஆன் ஓத முடியவில்லை என கூறப்படுகிறது.

🍎நபி صلى الله عليه وسلم அவர்கள் மற்றும் அவருடைய தோழர்களின் குர்ஆனுடனான தொடர்பு இவ்வாறு தான் இருந்தது மேலும் அத்தபுவ தாபியீன்களின் (ஸாலிஹான முன்னோடிகளுக்கு பின் வந்தவர்கள்) ரமளான் மாதத்திலான குர்ஆனுடைய தொடர்பு எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம்

ان شاء الله

#⃣ 6⃣ ➡ *C*

*குர்ஆனுடனான அத்தபுவ தாபியீன்களின் (ஸாலிஹான முன்னோடிகளுக்கு பின் வந்தவர்கள்) தொடர்பு*

📕’ரமளான் ஆரம்பித்தால் ஸுஃப்யான் அத்தவ்ரி அவர்கள் எல்லாவித வழிபாடுகளையும் விட்டுவிட்டு குர்ஆனிடம் திரும்பி விடுவார்கள்’

📗’ஸ’அய்து இப்னு ஜுபைர் அவர்கள் முழு குர்ஆனையும் இரண்டு இரவுகளில் முடிப்பவராக இருந்தார்கள்.’

📘’ரமளான் ஆரம்பித்தால், மாலிக் இப்னு அனஸ் அவர்கள் எல்லாவித அறிவு வட்டத்திலிருந்தும் ஓடி வந்து அதற்கு பதிலாக குர்ஆன் ஓதுவதின் பக்கம் திரும்பக்கூடியவராக இருந்தார்கள்.’

📙’ரமளான் ஆரம்பித்தால், ஜஹ்ரிய் அவர்கள், ‘நிச்சயமாக இது குர்ஆன் ஓதுவதும் மற்றும் ஏழைக்களுக்கு உணவளிப்பதும் ஆகும்’ எனக் கூறுபவராக இருந்தார்கள்.’

 

#⃣ 6⃣ ➡ *D*

*நம் ஸாலிஹான முன்னோடிகளின் ஓர் வழக்கமான நாள்*

🌤அவர்கள் தங்களுடைய நாளை தொழுகை மற்றும் துஆவோடு தொடங்குவார்கள் அதனை சூரியஉதயம் வரை தொடருவார்கள். அவர்கள் நாள் முழுவதும் குர்ஆன் ஓதுவதாகவே இருக்கும். அவர்கள் ரமளான் மாதத்தில் எவ்வளவு மணி நேரம் குர்ஆன் ஓதுவார்கள் என கணக்கிட்டால், அதில் பெரும்பாலான நேரம் குர்ஆனுக்கே போகும்.

🌥’அஸ்வத் இப்னு யஜீத் அவர்கள் குர்ஆனை இரண்டு இரவில் ஓதி முடித்து விடுவார்கள்’

⛅’கதாதா அவர்கள் ஏழு நாட்களில் குர்ஆன் ஓதி முடித்து விடுவார்கள் மேலும் ரமளானில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடித்து விடுபவர்களாக இருந்தார்கள்’

🕰சராசரியாக குர்ஆன் ஓதுபவர் ஓர் ஜுஸுவை ஓதுவதற்கு 30-35 நிமிடங்கள் ஆகும். குர்ஆன் 30 ஜுஸுக்களை கொண்டது. எனவே அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் ஓர் நாளைக்கு 10 ஜுஸு முடிப்பவர்களாக இருந்தார்கள் என்பதாகும். (30 நிமிடங்களை 10 ஜுஸுவால் பெருக்கினால் = 300 நிமிடங்கள்/60= 5 மணிநேரம்). எனவே அவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் குர்ஆன் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என நாம் கூறலாம்.

 

 

 

#⃣ 6⃣ ➡ *E*

*நம் ஸாலிஹான முன்னோடிகளின் ஓர் வழக்கமான நாள்*

🍽ரமளானில் உத்மான் இப்னு அஃப்ஃபான் அவர்களின் வழக்கமான நாள் பகலில் நோன்பு மற்றும் இரவில் தொழுகை மற்றும் ஸஜ்தாவில் ஈடுபட்டதாக இருந்தது. ‘(ஸுனன் அல்-பைஹகி 4/301).

🗡 மேலும் உத்மான் பின் அஃப்ஃபான் அவர்கள் நோன்பு நோற்று இருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டார்கள். (அல்-ஹில்யா 1/55)

🤐அவர்கள் நாள் முழுவதும் வீணான பேச்சுகளை தவிர்த்து துஆக்களால் நிறைந்திருந்தது.

🙉🙈🙊ஜாபிர் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள், ‘நீஙகள் நோன்பு நோற்றால், உங்களுடைய காதுகள், கண்கள் மற்றும் நாவை பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீய செயல்களை விட்டும் நோன்பு நோற்குமாறு செய்யுங்கள். மேலும் அமைதியாக இருங்கள், நீங்கள் நோன்பு நோற்கும் நாள், நோன்பு நோற்காத நாள் ஆகிய இவ்விரண்டையும் ஒரே மாதிரி ஆக்கிவிடாதீர்கள்’ (இப்னு அபி ஷய்பா 2/422)

🍱🍹இஃப்தாருடைய நேரம் வந்தால் அவர்கள் ஏழைகளுக்கும் துரதிருஷ்டவசமானவர்களுக்கும் உணவளிப்பதற்காக ஓடுவார்கள். இப்னு உமர் அவர்கள் ஏழை மக்களோடு தன் நோன்பை திறக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் மேலும் அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஓர் ஏழை வந்து தனக்கு உணவு வேண்டும் என அவரிடம் கேட்டால், அவர் தன்னுடைய பங்கையும் அவருக்கு கொடுக்கக் கூடியவராக இருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.’

 

#⃣ 6⃣ ➡ *F*

*நம் ஸாலிஹான முன்னோடிகளின் ஓர் வழக்கமான நாள்*

🌷ஸாலிஹான முன்னோடிகள் பாவம் செய்யும் மக்கள் மற்றும் அவர்களின் கூட்டங்களிலிருந்து தள்ளியே இருப்பார்கள்.

🌷 நிச்சயமாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்’உத் அவர்களிடமிருந்து எடுத்துக்காட்டை காணலாம், அவர்கள் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டாலும், அங்கு தடைசெய்யப்பட்ட ஏதேனும் காரியம் இருக்குமாயின் அவர்கள் அந்த விருந்தை விட்டுவிடுவார்கள். அவர்கள் பாவம் செய்யும் மற்றும் புதுமைகளை புகுத்தும் மக்களிடமிருந்து தள்ளியே இருப்பார்கள். இவ்வாறே, அவர்களுடைய இருதயங்கள் தூயதாகவும், சுத்தமானதாகவும் தொடர்ந்து இருக்கும். தீய மக்களின் சந்தேகங்கள் மற்றும் ஆசைகளால் அவர்கள் பாதிக்கப்படவோ அல்லது ஊடுருவப்படவோ மாட்டார்கள். நல்ல மக்களுடன் மட்டுமே கலந்திருப்பது மேலும் தடைசெய்யப்பட்ட அம்சங்கள் எதுவும் இல்லாத அமைப்புகளில் மட்டும் கலந்து கொள்ளுதல் போன்றவற்றால், அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள முடிந்தது மேலும் அவர்களுடைய நம்பிக்கையை பலமாக வைத்துக்கொண்டனர்.

🌷ஓர் ஸாலிஹான முன்னோடி இறக்கும் போது அழுதுக்கொண்டிருந்தார், அவரிடம் “எது உங்களை அழ வைக்கிறது ?” என கேட்கப்பட்டபோது, அவர், “நான் இல்லாமல் நோன்பு நோற்பவர்கள், நான் இல்லாமல் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்கள், நான் இல்லாமல் தொழுபவர்கள், இதுவே என்னை அழ வைக்கிறது.” என்றார்.

🥀 (படிக்க பக்கம் 55, அப்துல்-மாலிக் பின் முஹம்மது இப்னு அப்துல் ரஹ்மான் அல்-காஸிம், அமைதியான நொடிகள்: இறப்புக்கு முந்திய மற்றும் பிந்திய அம்சங்களின் விளக்கம். தாருஸ்ஸலாம் வெளியீடு. ரியாத்:2004.)

RAMADAN # 7

🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯RAMADAN🕯✨

#⃣ 7⃣

🌙 In shaa Allah we will start  about Ramadan in detail …
بإذن الله

✅ In Arabic ”Fasting” is said, صوم OR صيام.

✅ Linguistically in Arabic language صوم OR صيام. means when you stop yourselves from doing something/you abstain from something/you refrain from doing something.

✅Islamically صوم OR صيام means ,”to stop yourself/to prevent yourself /refrain from /abstain from eating and drinking and intercourse and all of the other types of acts that will break your fast from the dawn of the True Fajr until the Sunset.You make an intention for the sake of Allaah عزوجل that you will not eat and drink and all of the other types of things which break your fast.
🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌🕋🕌

✨🕯 ரமழான்🕯✨

#⃣ 7⃣

🌙 ரமழானை பற்றி இனி ان شاء الله நாம் விரிவாக காண்போம்
بإذن الله

✅ அரபியில் “நோன்பு (உண்ணாமை)” என்றால் صوم அல்லது صيام எனப்படும்

✅அரபி மொழியின் இலக்கணவாரியாக பார்த்தால் صوم அல்லது صيام என்றால் ஏதேனும் செய்வதிலிருந்து உங்களை நீங்களே தடுத்தல் /ஏதேனையும் தவிர்த்தல்/ஏதேனையும் விட்டு விலகி இருத்தல் என்பனவாகும்.

✅ இஸ்லாமியரீதியில் பார்தோமானால் صوم அல்லது صيام என்றால் உண்பதிலிருந்தும், பருகுவதிலிருந்தும்,
மேலும் உடலுறவு கொள்வதிலிருந்தும் இன்னும் அதிகாலை
உண்மையான பஜ்ர் நேரத்திலிருந்து சூரியஸ்தமம் ஆகும் வரை நோன்பை முறிக்கின்ற அனைத்து விஷயங்களிலிருந்தும் தங்களை தாங்களே தடுத்தல்/விலகியிருத்தல்/தவிர்த்தல் என பொருள்படும். நீங்கள் அல்லாஹ் عزوجل க்காக உண்ணாமலும், பருகாமலும் இன்னும் நோன்பை முறிக்கின்ற அனைத்து செயல்களிலும் நீங்கள் ஈடுபடாமல் இருப்பதாக நிய்யத்(எண்ணம்)வைத்துக்கொள்வதேயாகும்