*Dua for success in all your affairs*

✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *DUA 24* 🍥
© *Productive Muslimah*

🎀 *Dua for success in all your affairs* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

🔸 _H’asbiyallaahu Laaa Ilaaha Illaa – Huwa A’layhi Tawakkaltu Wa Huwa Rabbul A’rshil A’z’eem_

🍣🥝 *”Sufficient for me is Allah ; there is no deity except Him. On Him I have relied, and He is the Lord of the Great Throne.”*

🖊(Sura at-Tawbah, 9: 129)🖊

🌹 A brief understanding of the dua 🌹

💖 The following supplication was revealed especially for
our beloved Prophet Muhammad ﷺ. When people of Makkah rejected the message of Tawheed and started humiliating the Prophet ﷺ by laughing at him and insulting him, Allah encouraged and consoled the Prophet so that he did not get frustrated. He commanded the Prophet Muhammad ﷺ to pray (Dua) with the following words.

🚨🎙 When people are faced with any issues, wants or needs, the first thing they do is look to others to find a solution. They also complain, blame and show their frustration with the turn of events. And when things go wrong, then only they turn to Allah for help as a last resort.

💎 However the quality of the pious and righteousness believers is that *these believers ask Allah FIRST and foremost* for whatever their needs are, rather than leave their reliance upon Allah as an afterthought.

📩🎈 So the first category who rely more on themselves and others rather than on Allah show a kind of self sufficiency that is not pleasing to Allah and which in fact is distancing them from His love.
Whereas, the latter category who turn to Allah first, rely on Him most and then take the means, have indeed qualified themselves as the *mutawakkiloon* whom Allah loves.

🌈 Verily, for those who place their full trust in their Lord, seeking ALL good from Him, Allah will send for him help from different sources – be it from people or a change in circumstances.

🌟 إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ

*“Certainly, Allah loves those who put their trust (in Him).”*
🔹(Surah Imran 3:159)

🛋🛋 So, should we rely on any, other than Allah – The Rabb of the Mighty Throne, the Rabb of the Heavens and the Earth, the Rabb of all that exists, the only Ilaah worthy of worship❓ No! Truly, Sufficient is Allah for the believers against all odds, against the Shaytaan and his allies, against all the oppressors and enemies of Islam, against all evil and whisperings from jinn and mankind, against all trials and calamites of life and death.

💟🌱 This dua’a was recited by our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam and we as his followers also should try to recite it to put out trust in Allah (alone) and to ask for fulfillment of all our desires and protection against all odds.

📌 So let’s commit this dua to memory and ensure that from now on, we ask EVERYTHING from Allah, no matter how big or small it is.
✨🌸✨🌸✨🌸✨🌸✨
✨🌸✨🌸✨🌸✨🌸✨

🍥 *துஆ 24* 🍥

🎀 *உங்களுடைய எல்லா செயல்களும் வெற்றி பெறுவதற்காக ஓதும் துஆ* 🎀

📓🖋📓🖋📓🖋📓🖋📓

🌟حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

🔸 _ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ‘அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்_

🍣🥝 *”எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை. அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி”.*

🖊(ஸூரா அத் – தவ்பா, 9: 129)🖊

🌹 இந்த துஆ பற்றிய ஒரு விரிவான புரிதல்🌹

💖 பின்வரும் இந்த பிராத்தனை (துஆ) குறிப்பாக நமது அன்பிற்குரிய இறைத்தூதர் முஹம்மது ﷺ அவர்களுக்காக இறக்கபட்டது. மக்காவாசி மக்கள் தவ்ஹீதின் செய்தியை நிராகரித்தார்கள் மேலும் இறைத்தூதர் ﷺ அவர்களை அவமானப்படுத்த தொடங்கினார்கள் அவர்களை பார்த்து சிரித்தார்கள் , அவர்களுக்கு அவமரியாதை செய்தார்கள். அல்லாஹ் இறைத்தூதரை உற்சாகப்படுத்தி ஆறுதல் கூறினான் அதனால் அவர்கள் விரக்தியடையவில்லை. அவன் இறைத்தூதர் முஹம்மது ﷺ அவர்களை பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை (துஆ) கேட்குமாறு கட்டளையிட்டான்.

🚨🎙 எந்தவொரு பிரச்சனைகளையும், தேவைகளையும் மற்றும் அவசியங்களையும் மக்கள் எதிர்கொள்ளும் போது முதலில் அவர்கள் செய்வது என்னவென்றால் மற்றவர்களை பார்த்து அதற்கான தீர்வை கண்டறிகின்றனர். மேலும் அவர்கள் திரும்பிய நிகழ்வைப் பற்றி புகார் செய்கிறார்கள் , பழி கூறுகிறார்கள் மற்றும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டுகிறார்கள். அந்த விஷயங்கள் தவறாகும் போது தான் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனின் உதவியை கோரி இறுதியில் அவனிடம் தஞ்சம் அடைகிறார்கள்.

💎 எனினும் நேர்மையான முஃமீன்களின் நன்னெறியான தரம் என்னவென்றால் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் *அந்த மூஃமீன்கள் முதலிலும் முக்கியமானதுமாக அல்லாஹ்விடம் தான் கேட்பார்கள்.* அதற்கு மாறாக முரண்பாடான எண்ணத்தைக் கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை இழக்கமாட்டார்கள்.

📩🎈 எனவே முதல் வகையில் இருப்பவர்கள் அல்லாஹ்வைக் காட்டிலும் தன்னையும் மற்றவர்களையும் அதிகமாக நம்பியிருப்பார்கள் இது தன்னிறைவு வகையை காட்டுகின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிரியமானதல்லாத தன்மை உடையவையாகும். மேலும் இது உண்மையில் அவனது அன்பிலிருந்து அவர்களை விலக்கி வைக்கிறது.
அதே சமயம் அடுத்த வகையில் இருப்பவர்கள் முதலில் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவன் மீது அதிகமான நம்பிக்கையை கொண்டு, செயல்களை செய்வார்கள். இத்தகையவர்களை உண்மையாக *முத்தவக்கிலூன்* அல்லாஹ்வால் விரும்பப்படுபவர்கள் என்ற தகுதியை பெற்றிருப்பார்கள்.

 

🌈 நிச்சயமாக எவரொருவர் தன் இறைவனின் மீது முழு நம்பிக்கையயும் வைக்கிறாரோ ,அவனிடமிருந்தே எல்லா நன்மைகளையும் தேடுகிறாரோ , அவர்களுக்கு அல்லாஹ் பல்வேறு இடங்களில் இருந்து உதவி செய்வான் – இது மக்களிடமிருந்தோ அல்லது சூழ்நிலைகளில் ஒரு மாற்றமாகவோ இருக்கலாம்.

🌟 إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ

*”நிச்சயமாக , அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.”*
🔹(ஸூரா இம்ரான் 3:159)

🛋🛋 எனவே , மகத்தான வல்லமைபடைத்த சிம்மாசனத்தின் (அர்ஷின்) அதிபதியும், சொர்க்கம் மற்றும் நரகத்தின் அதிபதியும், மீதமிருக்கும் எல்லாவற்றிற்கும் அதிபதியாகிய வணக்கத்திற்குரிய ஒரே இறைவன் அல்லாஹ் அவனை தவிர வேறு யாரை நம்மால் சார்ந்திருக்க முடியும்❓நிச்சயமாக , முடியாது ! , இறைநம்பிக்கையாளர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராகவும் , ஷைத்தான் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு எதிராகவும் , அடக்குமைறையாளர்கள் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராகவும் , ஜின்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் அனைத்து தீய செயல்களுக்கு எதிராகவும் , பிறப்பு மற்றும் இறப்பின் அனைத்து சோதனைகள் மற்றும் பேராபத்துகளுக்கு எதிராகவும் சர்வவல்லமை படைத்த அல்லாஹ்வே முஃமின்களுக்கு போதுமானவன்.

💟🌱 இந்த துஆ நமது அன்பிற்குரிய இறைத்தூதர் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களால் ஓதப்பட்டது ஆதலால் அவர்களை பின்பற்றுவோராகிய நாமும் இந்த துஆவை, அல்லாஹ்வின் மீது மட்டுமே நம் நம்பிக்கையை வைப்பதற்காக ஓது வேண்டும். மேலும் அவனிடமே நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுமாறும் , அனைத்து பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்குமாறும் கேட்க வேண்டும்.

📌 ஆகவே இந்த துஆவை நாம் மனனம் செய்து , நமது தேவை எவ்வளவு பெரியதோ , சிறியதோ எதுவாக இருந்தாலும் சரி நமக்கு தேவையான *எல்லாவற்றையும்* நாம் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டுமென்று இப்போதிலிருந்து உறுதி கூறுவோம்.

✨🌸✨🌸✨🌸✨🌸✨

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s