Hajj 44

🗻 Hajj 🗻

#⃣4⃣4⃣

Mistakes made during the Farewell tawaaf

🎓Shaykh Muhammad ibn ‘Uthaymeen (may Allaah have mercy on him) said: “It was proven in al-Saheehayn that Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) said:

“The people were commanded that the last thing they should do in Makkah was to circumambulate the Ka’bah, but an exception was made for menstruating women🚺.”

📚Narrated by al-Bukhaari, 1755; Muslim, 1328.

So tawaaf should be the last action of Hajj that a person does.

⚠People make several mistakes when performing the farewell tawaaf:

#⃣1⃣

Some people do not make tawaaf the last thing that they do, rather they go down to Makkah and do the farewell tawaaf when they still have to stone the jamaraat, then they go out to Mina and stone the jamaraat and then leave. This is a mistake and that does not suffice as the farewell tawaaf in this case, because it is not the last thing that the person does in Makkah, rather the last thing that he does is stoning the jamaraat.

2⃣

Some people do the farewell tawaaf and then stay in Makkah after that. This means that their farewell tawaaf is invalidated, and they must do another one when they are going to leave. But if a person stays in Makkah after doing the farewell tawaaf in order to buy something 🛍or to load his luggage 📦etc, there is nothing wrong with that.

3⃣

Some people, when they do the farewell tawaaf and want to leave the Mosque, walk backwards🙄, saying that they do not want to turn their backs to the Ka’bah🕋. This is a bid’ah (innovation) which was not done by the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) or by any of his companions.

4⃣

Some people, after doing the farewell tawaaf, stop at the door🚪 when leaving the mosque and turn to face the Ka’bah, as if bidding farewell to it, and they make du’aa’ or say salaams and so on. This is also a kind of bid’ah, because the Prophet (peace and blessings of Allaah be upon him) did not do that. If it were something good the Prophet (peace and blessings of Allaah be upon him) would have done it.
🗻 ஹஜ் 🗻

#⃣4⃣4⃣

  விடைப்பெறும் இறுதி தவாஃபில் செய்யப்படும் தவறுகள்

🎓 ஷேய்க் முஹம்மது இப்னு உதைமீன் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) கூறியுள்ளார்கள்: “ஸஹீஹைனில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ அன்ஹீ) கூறியுள்ளார்கள்:

” மக்கள் மக்காவில் கஃபதுல்லாவை வலம்வரும் செயலை இறுதியாக  செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள், ஆனால் ஹைழான (மாதவிடாய் ஆன) பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது 🚺.”

📚 அல் -புகாரியில் அறிவிக்கப்பட்டுள்ளது, 1755; முஸ்லிம்,1328.

எனவே  ஹஜ் செய்யக்கூடிய ஒருவரின் இறுதி செயல் தவாஃப் செய்வதாகும்.

⚠ மக்கள் இறுதி தவாஃப் செய்யும்போது நிறைய தவறுகள் செய்கின்றனர்:

#⃣1⃣

சில மக்கள் தங்களின் செயல்களில்  தவாஃபை இறுதியாக செய்வதில்லை, மாறாக அவர்கள் ஜமராத்தில் கல்லெறிவதற்கு முன்பு மக்காவிற்கு சென்று விடைபெறுவதற்கான இறுதி தவாஃப் செய்துவிட்டு பிறகு  அவர்கள் மினாவுக்கு சென்று  ஜமராத்தில் கல்லெறிந்துவிட்டு வெளியேறுகின்றனர். இது தவறாகும் மேலும் இந்த நிலையில்  செய்யப்படும் இறுதி தவாஃப் போதுமானதாக ஆகாது, ஏனெனில் அவர் மக்காவில் செய்த கடைசி செயலாக இது அமையாது, மாறாக இவர் ஜமராத்தில் கல்லெறிந்ததே  இவரது இறுதி செயலாக அமைந்துவிடுகின்றது.

2⃣

சில மக்கள் இறுதி தவாஃப் செய்துவிட்டு அதன்பிறகும் மக்காவில் தங்கியிருக்கின்றனர். இதன்மூலம் அவர்களின் இறுதி தவாஃப் செல்லுபடியற்றதாகிவிடுகின்றது, மேலும் அவர்கள் வெளியேறும் போது அவர்கள் மற்றொரு தவாஃப் செய்ய வேண்டும். ஆனால் ஒருவர் இறுதி தவாஃப் செய்துமுடித்த பிறகு ஏதேனும் பொருள் வாங்குவதற்காகவோ 🛍 அல்லது தன் பயணபொருட்களை ஏற்றுவதற்காகவோ 📦  தாமதித்தால் தவறில்லை, இதனால் யாதொரு குற்றமில்லை.

3⃣

சில மக்கள், அவர்கள் இறுதி தவாஃப் செய்த பின்பு மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது பின்னோக்கியவண்ணமாக நடக்கின்றனர் 🙄, அவர்கள் தங்களின் பின்புறங்களை கஃபாவின் 🕋 பக்கம் திருப்ப விரும்பவில்லையென கூறுகின்றனர். இது பித்அத்தாகும் (இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட புதுமையான செயல்) இந்த செயல் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களாலோ அல்லது அவர்களது தோழர்களாலோ செய்யப்படாத செயலாகும்.

4⃣

சில மக்கள், இறுதி தவாஃப் முடித்தபிறகு, வாசலில் 🚪நின்று மஸ்ஜிதிலிருந்து வெளியேறும்போது கஃபாவை நோக்கி பிரியாவிடையளிக்கும் விதமாக துஆ செய்கின்றனர் அல்லது ஸலாம் கூறுவது போன்ற செயல்களை செய்கின்றனர். இதுவும் ஒருவகை பித்அத்தாகும், ஏனெனில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவ்வாறு செய்யவில்லை. இவ்வாறு செய்வதில் ஏதேனும் நன்மை இருந்திருந்தால் இறைத்தூதர் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டாயம் அதனை செய்திருப்பார்கள்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s